வீரவநல்லூர்,அக்.19: சேரன்மகாதேவி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் பத்தமடை அரசு மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, நெல்லை அருணா கார்டியாக் கேர் சென்டர் ஆகியவற்றை சேர்ந்த டாக்டர்கள். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கினர். இதில் தாசில்தார் ரமேஷ், மண்டல துணைத்தாசில்தார் சீதாதேவி, தலைமையிடத்து துணைத்தாசில்தார் மாரிச்செல்வம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள், சப்-கலெக்டர் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் துரைபாண்டி, பட்டு, குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.