புதுக்கோட்டை, ஜூன் 27: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், சேந்தன்குடி ஊராட்சி பகுதியில், ரூ.7.26 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்; ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கிராமப்புற பகுதிகளுக்கு தேவையான, குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, சேந்தன்குடி ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.4.66 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிமெண்ட் சாலை மற்றும் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேவர் பிளாக் சாலை ஆகியவை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.