ராஜபாளையம், ஆக.27: சேத்தூர் பேரூராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கான பூஜையை எம்எல்ஏ துவக்கி வைத்தார். ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சி வலையர்தெரு பகுதியை சார்ந்த பொதுமக்கள் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனை நேரில் சந்தித்து ரேஷன் கடை வேண்டி மனு அளித்தனர். இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.12 லட்சம் என ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, சேத்தூர் பேரூராட்சி வார்டு 3 வலையர் தெரு மற்றும் வார்டு 10 ஆதிதிராவிடர் தெரு என இரண்டு பகுதிகளில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் கண்ணன், பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச்செல்வம், கவுன்சிலர்கள் ராஜசோழன், நிஜாம், நீராத்துலிங்கம், வனராஜ், பூஇசக்கி, சமுத்திரம், தவம், வார்டு செயலாளர் பண்டாரம், மாதவன், இளைஞரணி கருப்பசாமி, நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.