சென்னை, மே 27: சேத்துப்பட்டு பகுதி யில் மெத்தபெட்ட மின் விற்ற 2 வாலிபர்களை போலீ சார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் நேற்று காலை சிலர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேத்துப்பட்டு போலீசாருடன் ஒருங்கிணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஹாரிங்டன் சாலையில் கண்காணித்தனர். அப்போது, 11வது அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் சுற்றி வந்தனர்.
அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, 1.94 கிராம் மெத்தபெட்டமின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் (30) மற்றும் பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த ராஜா (32) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து மெத்தபெட்டமின் வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.