விருதுநகர், மே 21: மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பாக டிஆர்டிஓ நிதி உதவியுடன் ஐஓஎம்டி மற்றும் 5ஜி அடுத்த தலைமுறை ராணுவ செயல்பாடுகளை செயல்படுத்துதல் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது. இதில் கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமது ஜலீல் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ்எம் சீனி முகைதீன், எஸ்எம் சீனிமுகமது அலியார், எஸ்எம் நிலோபர் பாத்திமா, எஸ்எம் நாசியா பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் மூத்த விஞ்ஞானி, பொது மேலாளர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். துறை தலைவர் பாரிஷா பேகம் வரவேற்புரை வழங்கினார். கருத்தரங்கு ஏற்பாட்டை கருத்தரங்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் பாண்டிமா தேவி, பாத்து நிஷா மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.