தர்மபுரி, செப்.5: புலிகரை அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், மறு சுழற்சிக்காக ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புலிகரை அரசு பள்ளி வளாகத்தில், பிளாஸ்டிக் இல்லா தமிழகம் எனும் திட்டத்தின் கீழ், கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை தண்ணீர் பாட்டில்கள், சாக்லேட் உறைகள் என பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்காக, புலிகரை கிராம ஊராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்களிடம் பள்ளித் தலைமை ஆசிரியை மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில், தூய்மை இந்தியா இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள், தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சிக்காக ஒப்படைப்பு
previous post