விருதுநகர், ஜூலை.2: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்ட செயலாளர் சுதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார மையங்களில் இடை நிலை சுகாதார பணியாளர் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.
துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்களான இடை நிலை சுகாதார பணியாளர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தால் துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.