ராமநாதபுரம், ஜூலை 2: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொதுசுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் ராமநாதபுரம் சுகாதார மாவட்ட தலைவர் விமலா தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதார மாவட்ட தலைவர் சியா, ராமநாதபுரம் செயலாளர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார மையங்களில் தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது. துணை சுகாதார மையங்களில் தற்காலிக செவிலியர் நியமனத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலியாக உள்ள 4 ஆயிரம் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.