காரிமங்கலம், ஜூன் 10: காரிமங்கலம் ஒன்றியம், பந்தாரஅள்ளி ஊராட்சி, மன்னாடிப்பட்டி கிராமத்தில் செல்லியம்மன், செல்லப்பன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 8ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையுடன், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. நாகரசம்பட்டி சிவமுருகு இளவேனில் தலைமையில், சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேம் நடத்தி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (10ம் தேதி) முதல் 24 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பந்தாரஅள்ளி, மன்னாடிபட்டி, கீழ் சவுளுப்பட்டி, பாப்பாரப்பட்டி, கொட்டாவூர் ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
57