சேலம், மே 28: சேலம் மெய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிகாஷ் மாலிக் (41). இவர் நேற்று முன்தினம், பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த 2 வாலிபர்கள் பிகாஷ் மாலிக்கை மிரட்டி, அவரது செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து, அவர் சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், சேலம் புதுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (19), குகை ராமலிங்கம் கோயில் தெருவைச் சேர்ந்த வீரமணி (18) ஆகிய இருவரும் சேர்ந்து, செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன், வீரமணி இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.