திருச்சி, ஆக.21: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் திண்ணையம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா(29). இவர் கோவை செல்வதற்காக மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர், கருப்பையா கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து ராம்ஜிநகர் கே.கள்ளிக்குடியை சேர்ந்த பிரபாகரனை(43) கைது செய்து, சிறையில் அடைத்தனர்.