திருப்பூர், நவ.10: திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா வரவேற்றார். கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான மேகலா மைதிலி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: குழந்தைகளாகிய நீங்கள் சிறு வயது முதலே அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தின் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
செல்போன் பயன்படுத்தும் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும். மாணவ,மாணவிகள் செல்போனுக்கும்,சமூக வலைதளங்கங்களுக்கும் அடிமையாகிவிட கூடாது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் நீதிமன்ற வக்கீல்கள் அருணாச்சலம், கணபதி மற்றும் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ரதிபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முடிவில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சந்தோஷ் நன்றி கூறினார்.