Wednesday, April 17, 2024
Home » செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 8வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 8வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை

by MuthuKumar

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மென்பொறியாளர் னிவாச கிருஷ்ணகுமார். இவரது மனைவி சைனஜா. மகன் சூரம்புடி ஸ்ரீராம் (14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், சூரம்புடி ராம் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சமீப காலமாக படிப்பில் கவனம் செலுத்தாமல், சிறுவன் எந்நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், அவனது தாய் கண்டித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும், சிறுவன் பாடம் படிக்காமல் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடி உள்ளான். இதைக் கண்ட தாய் சைனஜா, மகனை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த சிறுவன் சூரம்புடி ஸ்ரீராம், வீட்டில் அனைவரும் தூங்க சென்ற சமயத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டின் 8வது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்துவிட்டான். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்து வலியால் துடித்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

 மதுரவாயல் லட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவரது மகள் ஸ்ருதிலயா (17). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை நடராஜன் இறந்துவிட்டார். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ருதிலயா பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறைக்குள் சென்றவர் வெளியே வராததால் தாய் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ருதிலயா தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தந்தை இறந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ருதிலயா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

You may also like

Leave a Comment

19 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi