Wednesday, April 17, 2024
Home » செலவின பார்வையாளர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம்

செலவின பார்வையாளர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம்

by Karthik Yash

கிருஷ்ணகிரி, மார்ச் 22: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான செலவினங்கள் குறித்த புகார்களை, செலவின பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செலவினங்கள் குறித்த புகார்களை, கிருஷ்ணகிரி பயணியர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள செல்போன் எண்ணில் அல்லது மின்னஞ்சல் மற்றும் நேரில் தெரிவிக்கலாம். அதன்படி கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்டவர்கள் செலவின பார்வையாளர் சுதன்ஷூ சேகர் கவுதமை- 9363761604 எண்ணிலும், அவரது தொடர்பு அலுவலர் கார்த்திக்கை- 9600265330 என்கிற எண்ணிலும், expenditureobserverkgi24 @gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளலாம். இதே போல், வேப்பனஹள்ளி, ஓசூர், தளி தொகுதிக்கு உட்பட்டவர்கள் போசலே சந்திப் தின்கரை- 9363975563, அவரது தொடர்பு அலுவலர் சீராஜை- 9047014643 எண்ணிலும் expenditureobserver1kgi24@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

nineteen + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi