மதுராந்தகம், ஆக. 26: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் செய்யூரில் நேற்று காலை நடைபெற்றது. இதில், ஒன்றிய அவைத்தலைவர் மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாபு அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் பத்மநாபன், அர்ஜுனன், மகாகணபதி, டில்லி பாபு, வெங்கடேசன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில், புதுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ், செய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம், துணை தலைவர் திவாகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்மொழிவர்மன், கவுன்சிலர்கள் மோகனா கோபிநாத், பர்வதம் வரதன், செல்வகுமார் உள்ளிட்ட திமுக கிளை செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.