வேலூர், ஜூலை 2: வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபிரகாஷ் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த சுப்பையா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் யாரும் நியமிக்கப்படாத நிலையில் சமீபத்தில் தேனியில் இருந்து பதவி உயர்வு பெற்று கதிரவன் திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவர் அங்கு பணியில் சேராததால், அந்த இடத்தில் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டார். இவரது பணியிடத்தில் தேனியில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து பதவி உயர்வு பெற்ற கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாற்றம் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட
0