கிருஷ்ணகிரி, ஆக.23: கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறுக்கி விஏஓ தங்கராஜ் (39), நேற்று மகராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதில், கல்லுக்குறுக்கி ஊராட்சிக்கு உட்பட்ட ராமிநாயனஅள்ளி மலை அடிவாரத்தில் உள்ள அரசு நிலத்தில், கடந்த 14.3.2022ம் ஆண்டு முதல் 9.8.2024ம் ஆண்டு வரை, மேல்பட்டி தர்மராஜா நகரை சேர்ந்த நாகன், ராமிநாயனப்பள்ளி மூர்த்தி, சிவக்குமார், சம்பத், ராஜா ஆகிய 5 பேரும், அங்கிருந்த வேலி கற்களை உடைத்து, ₹67.05 லட்சம் மதிப்பிலான செம்மண்ணை அள்ளி கடத்திச்சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதன் பேரில் நாகன், மூர்த்தி, சிவக்குமார், சம்பத், ராஜா ஆகிய 5 பேர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்மண் கடத்திய 5 பேர் மீது வழக்கு
previous post