தாரமங்கலம், ஆக.28: தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை சென்றாய பெருமாள் கோயில் தேர் திருவிழா, ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று மாலை ஸ்ரீ தேவி பூதேவி மற்றும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்டது. ஓமலூர் எம்எல்ஏ மணி மற்றும் ஊர் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து உரியடி உற்சவ விழா நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சென்றாய பெருமாள் கோயில் தேர் திருவிழா
previous post