சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடி வருகிறார். இவர், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க உள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான பயிற்சி நடக்கிறது. இதற்காக 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும், அவர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளார். மாநகராட்சி பள்ளியில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதேபோல், சென்னை மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள் உள்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது….