சென்னை: சென்னை மாடம்பாக்கத்தில் ஏசி போட்டு வீட்டில் கஞ்சா செடி வளத்ததுடன் வெளிநாட்டு எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதை பொருளையும் பதுக்கி விற்பனை செய்துவந்த மென்பொறியாளர் உட்பட நான்குபேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மதுபானக்கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் சிலர் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதை பொருளை விற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேல் என்பவர் இந்த செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாடம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி கைது செய்தனர். விசாரணையில் ரயில்வே ஊழியர் சாம் சுந்தர் மற்றும் ஸ்ரீகாந்த் நரேந்திர குமார் ஆகியோர் இந்த சட்ட விரோத விற்பனைக்கு உறுதுணையாக செயல்பட்டது தெரியவந்தது. …