திருப்பூர்,ஆக.28: பயணிகள் வசதிகாக சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் படி சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்:06043) இன்று 28ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை புதன்கிழமை தோறும் மாலை 3.45 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30க்கு கொச்சுவேலி சென்றடையும்.
அதே போல் கொச்சுவேலி-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்:06044) 29ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மாலை 6.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். சென்னை சென்ட்ரல் – கொச்சுவேலி சிறப்பு ரயில் திருப்பூருக்கு இரவு 10.13க்கும், கொச்சுவேலி-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அதிகாலை 4.18க்கும் வந்து சேறும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.