புழல், ஜூன் 5: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் அப்பளம்போல் நொறுங்கியது. டிரைவர் பலத்த காயம் அடைந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சோழவரம் அடுத்த அத்திப்பேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி ஒன்ற டயர் வெடித்து நின்றிருந்தது. அப்போது, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அந்த கன்டெய்னர் மீது மோதியது. இதில் காரின் மேல் பக்கம் சேதமடைந்து, அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி சென்ற புதுச்சேரியை சேர்ந்த சக்தி பாலகுரு (34) படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் கன்டெய்னர் மீது மோதி அப்பளமானது கார்
0