Tuesday, July 23, 2024
Home » சென்னையில் 200 வார்டுகளில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: பொதுமக்களுக்கு அழைப்பு

சென்னையில் 200 வார்டுகளில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: பொதுமக்களுக்கு அழைப்பு

by kannappan

சென்னை: மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிட் தொற்றிலிருந்து  பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோவிட்  தடுப்பூசிகள் விலையில்லாமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை செலுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்ற அடிப்படையில் வாரத்திற்கு இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (18.11.2021) 200 வார்டுகளிலும் தீவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் சுமார் 9 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய  நாட்களை கடந்துள்ளனர்.  தற்பொழுது மாநகராட்சியின் வசம் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி  செலுத்த வேண்டிய நபர்களும் மெகா தடுப்பூசி முகாம்களில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

14 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi