ஈரோடு, ஆக. 26: சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் வீரமணி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, பெருந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செங்கோட்டையன் செய்திருந்தார்.