சென்னை: ஒலி மாசை குறைப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பை மீண்டும் தொடரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 150 ஆண்டுகள் பழமையான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலி மாசை குறைப்பதற்காக ஒலி பெருக்கியில் அறிவிப்புகள் வெளியிடப்படுவது சோதனை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ஒலி பெருக்கியில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தான் அனைவருக்கும் உதவும் என்றும் எனவே மீண்டும் ஒளி பெருக்கி அறிவிப்பை தொடரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈ.வெ.ரா பெரியார் சாலை, வால்டஸ் சாலை, புறநகர் ரயில் நிலையம் செல்லும் பகுதி என மூன்று இடங்களில் டிஜிட்டல் பலகையில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒளிபரப்படுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் என இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே டிஜிட்டல் திரையில் மட்டுமே ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற திடீர் முடிவால் படிக்கதெரியாதவர்கள் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் பாதிக்கப்படும் சுழலும் எழுந்துள்ளது. …