ஈரோடு, அக். 19: ஈரோடு அடுத்த வேப்பம்பாளையம் ஸ்ரீ அம்மன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). தனியார் நிறுவன ஆடிட்டர். இவர், கடந்த 16ம் தேதி இரவு நசியனூர் மேட்டுக்கடை சாலையில் அவரது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தென்காசி மாவட்டம் பாபநாசம் ஜம்பகாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (45) என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக செந்தில்குமார் பைக், மோகன்ராஜ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். மோகன்ராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் செந்தில்குமார், மோகன்ராஜ் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசேரித்து விட்டு செந்தில்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், காயம்பட்ட மோகன்ராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.