அரியலூர், நவ. 26: அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், செந்துறை வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் வழங்கப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் ஆலோசனையின் படி குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை தெற்கு ஒன்றியத் திற்குட்பட்ட செந்துறை, நமங்குனம், நக்கம்பாடி, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், குமிழியம், பரணம்,பிலாகுறிச்சி, வீராக்கன், நாகல்குழி,
கீழமாளிகை உள்ளிட்ட ஊராட்சிகளிலுள்ள 261 முதல் 320 வரையுள்ள வாக்குச்சாவடிகளுக்கு செந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ், குன்னம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் அருண் ஆகியோர் திமுக நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பெயர் சேர்த்தல் நீக்கல் படிவம் 6, படிவம் 7 ஆகிய படிவத்தினை வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்வில், செந்துறை தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பலர் உடனிருந்தனர்.