உடன்குடி, ஜூன் 23: செட்டியாபத்து கோயில் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை உடனே அப்புறபடுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து கிராமத்தில் உள்ள ஐந்து வீட்டு சுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பல்லாயிரகணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து காது குத்தல், மொட்டை போன்ற நேமிசங்கள் செய்கின்றனர். ஆடு, கோழி, ஆத்தி படையல் போடுவர். கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் வருகின்றனர். கோயில் முன்புள்ள தோரண வாயில் அருகிலுள்ள மின்கம்பம் பல மாதங்களாக சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மின்கம்பம் விழுந்து விபரீதம் ஏற்படும் முன் உடனடியாக அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென பக்தர்கள், ஊர்மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உடன்குடி ஒன்றிய பாஜ செயலாளர் ராமசந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை தூத்துக்குடி,ஜூன் 23:தூத்துக்குடியில் நடந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாாிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்யாத 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்குட்பட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு பதிவு செய்யும் சிறப்பு முகாம் டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்டுமானம், உடல் உழைப்பு, சலவை தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர்கள், கைவினை தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பொற்கொல்லர், ஓவியர், மண்பாண்டம், சமையல் தொழிலாளர்கள், உப்பளம், உணவு விநியோகம் செய்வோர் இத்திட்டத்தில் இணைந்து பதிவு செய்து கொண்டனர்.
நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நடைபெற்ற சிறப்பு முகாமை பார்வையிட்ட வடக்குமாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆனந்த்பிரகாஷ், மாவட்ட தலைவர் முருகன், துணைச்செயலாளர் ராமசாமி, மாவட்ட மருத்துவஅணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, பகுதி செயலாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், கனகராஜ், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில்குமார், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.