உடன்குடி,ஆக.18: சுதந்திர தினத்தை முன்னிட்டு செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் நடந்த பொது விருந்தை யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்து துவக்கினார். இதில் அறங்காவலர் குழுத்தலைவர் மகேஸ்வரன், அறங்காவலர் வெங்கடேஸ்வரி, குலசேகரன்பட்டினம் பஞ். துணைத்தலைவரான வக்கீல் கணேசன், கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியம், திமுக இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஞ்சன், இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் மனோஜ், ஒன்றிய துணைச்செயலாளர் சுடலைகண், திருச்செந்தூர் தொகுதி சமூகவலைதள ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
செட்டியாபத்து கோயிலில் பொதுவிருந்து
previous post