எப்படிச் செய்வது : பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். இரண்டாம் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு வேக விடவும். உருண்டைகள் வெந்ததும், முதல் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும். இனிப்பான செட்டிநாடு பால் கொழுக்கட்டை ரெடி.
செட்டிநாட்டு பால் கொழுக்கட்டை
114
previous post