நெல்லை, ஆக. 30: நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம் செப்.19ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொதுக்குழு கூட்டம் வருகிற 19ம் தேதி காலை 11 மணியளவில் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. கூட்டத்தில் செஞ்சிலுவை சங்க வழிகாட்டி நெறிமுறைகளின் படி சங்க மேலாண்மைக்குழு உறுப்பினர்களால் சங்கத்திற்கான மாவட்ட தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர். கூட்டத்தில் அனைத்து ஆயுள்கால உறுப்பினர்களும் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற சுற்றறிக்கையுடன் தவறாமல் ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம்
previous post