செங்கோட்டை, ஆக.27: செங்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கோட்டை மேலூர், வம்பளந்தான் முக்கு, பெரிய பிள்ளை வலசை, கதிரவன் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் செங்கோட்டை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் பெரியபிள்ளை வலசையைச் சேர்ந்த கோதர் பிவி (62), செங்கோட்டை மேலூரைச் சேர்ந்த சந்தனமாரி என்ற மதன் (23), ராம்குமார் (28), குருசாமி (57), முப்பிடாதி (66), செல்லப்பா (64), கதிரவன் காலனியை சேர்ந்த குமார் (61) ஆகியோருக்கு சொந்தமான 7 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிந்து அங்கு விற்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 22 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை பகுதி கடைகளில் 22 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
previous post