செங்கோட்டை, செப்.6: செங்கோட்டை அருகே புதூர் பூலாங்குடியிருப்பை சேர்ந்த திவான் மைதீனின் மகன் சேக் அப்துல்லா (எ) நவாஸ் (41). பீடி கடை நடத்தி வந்ததோடு தென்காசி மாவட்ட திமுக பிரதிநிதியாக இருந்துவந்தார். இவர் நேற்று மாலை 3 மணிக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை அருகேயுள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பார்க்க நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது புளியரையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த மினிலாரி, இவரது மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த சேக் அப்துல்லா என்ற நவாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த சேக் அப்துல்லா (எ) நவாசின் மனைவி ஹக்கிமாள் பானு புதூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.