பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமப் பகுதியில் கிராவல் மண் திருடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மருவத்தூர் காவல்நிலைய எஸ்எஸ்ஐ குருநாதன் மற்றும் அவரது குழுவினர் அப் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை பிடித்து விசாரணை செய்ததில், எளம்பலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குருணாசாமி மகன் ராஜா (45) என்பவர் அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, 6 யூனிட் கிராவல் மண் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து பெரம்பலூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதே போல், தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச் சாராயம், கஞ்சா, போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் அருகிலுள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
செங்குணம் கிராமத்தில் லாரியில் கிராவல் மண் திருடிய வாலிபர் கைது
0
previous post