பெரம்பலூர்,நவ.10: செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் தாலுக்கா, செங்குணம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடைபெற் றது. பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கிரிஜா ராணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, ஒலக்காசி, அரசு ஆதி.ந.உ.நி.பள்ளி தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் கலந்து கொண்டு தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத் திடும் வகையில் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பேசினார். மேலும் பள்ளி பல்வேறு செயல்பாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சிவானந்தம், தமிழாசிரியை செல்வி, உதவி ஆசிரியர்கள் சுந்தர வடிவேல், ரமேஷ், ராமலிங்கம், பள்ளி தன்னார்வலர் செங்குணம் குமார் அய்யாவு உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.