செங்கல்பட்டு, மே 24: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 86 ஆயிரத்து 25 மாணவர்களுக்கு திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கின்ற வகையில், ‘நான் முதல்வன்’ என்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022-2023 மற்றும் 2023-2024 கல்வி ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல், கலை மற்றும் அறிவியல், ஐடிஐ, டிப்ளமோ என மொத்தம் 86 ஆயிரத்து 25 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.