சோழிங்கநல்லூர்: சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, காலை 10.30 மற்றும் 11.35 மணியளவில் கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், காலை 10.15, மதியம் 12.10 மற்றும் 1.05 மணியளவில் சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள், இரவு 11.40 மணியளவில் ஆவடி செல்லும் ரயில், காலை 9.40 மற்றும் மதியம் 12.40 மணியளவில் கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், மதியம் 1, 2.30 மற்றும் மாலை 3.15 மணியளவில் சென்ட்ரல் செல்லும் ரயில்கள், மதியம் 1.15, மாலை 3.10 மற்றும் இரவு 9.00 மணியளவில் சென்ட்ரல் செல்லும் ரயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரயில், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணியளவில் வரும் சூலூர்பேட்டை பயணிகள் ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணியளவில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணியளவில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி – கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.
பயணிகளின் வசதிக்காக, காலை 10.30 மணியளவில் சென்ட்ரல் – பொன்னேரி, காலை 11.35 மணியளவில் சென்ட்ரல் – மீஞ்சூர், மதியம் 12.40 மணியளவில் கடற்கரை – பொன்னேரி, மதியம் 1.18 மணியளவில் பொன்னேரி – சென்ட்ரல், மதியம் 2.56 மணியளவில் மீஞ்சூர் – சென்ட்ரல், மாலை 3.33 மணியளவில் பொன்னேரி – சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.