விருதுநகர், ஜூலை 4: சூலக்கரையில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் தகவல்: சூலக்கரை துணை மின்நிலையத்தில் இன்றுகாலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சூலக்கரை, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மார்டன் நகர், மாத்திநாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.