சேலம், ஜூன் 15: சேலம் சூரமங்கலம் தலைமை தபால்நிலையத்தில் வரும் 26ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் மேற்கு தபால் கோட்டத்தின் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீர் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு சூரமங்கலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், ஓய்வூதியம் சம்மந்தமான பிரச்னைகள், குறைகளை கோட்ட கண்காணிப்பாளர் பார்த்திபன் கேட்டறிகிறார். எனவே, சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர், அன்றைய தினம் நேரில் வந்திருந்து குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை கோட்ட கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சூரமங்கலம் தபால் நிலையத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
58
previous post