ஈரோடு: பவானி அடுத்துள்ள வைரமங்கலம் மாரியம்மன்கோயில் முன்பாக சூதாட்டம் நடப்பதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரெய்டு நடத்தியதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வைரமங்கலம், போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்த சந்திரன்(32), கோபால்(43), சக்திவேல்(37), மகேந்திரன்(30), பூபதி(31), பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன்(33), சாமிநாதன்(38) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4510 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.