தர்மபுரி, ஆக.7: பென்னாகரம் எஸ்எஸ்ஐ ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெட்டியாம்பட்டி கிராம ஏரியில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (46), சிவா (35), முருகன் (52), கனகராஜ் (39), அண்ணாதுரை (50) காமராஜ் (44) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹8 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.