ஈரோடு, அக். 31: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம், சுடுகாடு அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கவுந்தப்பாடி, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (43), செந்தாம்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி (38), அய்யம்பாளையத்தை சேர்ந்த பிரபு (35), தர்மாபுரியைச் சேர்ந்த ரமேஷ் (38), ஹாஸ்பிடல் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (46), அந்தியூர், புதுப்பாளையத்தை சேர்ந்த மாதவன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக்கட்டு, பணம் ரூ. 6,670 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.