பண்ருட்டி, ஜூலை 18: புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், பண்டரக்கோட்டை பைபாஸ் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகில் அதே ஊரை சேர்ந்த பாலாஜி(27), சதாசிவம்(30), தயாளன்(23), மாம்பட்டை சேர்ந்த சுரேஷ்(29), குமார்(27) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டு கட்டு ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாடிய 5 பேர் கைது
56