கிருஷ்ணகிரி, ஜூலை 27: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை எஸ்ஐ நடராஜ் மற்றும் போலீசார், கல்லியூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள மாந்தோப்பில் சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சரவணன்(39), ராஜூ(32), சென்றாயன்(48), வேலு(43) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ₹1200 பணத்தை பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 4 பேர் கைது
49
previous post