தர்மபுரி, ஜூன் 23: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது காட்டுசிகலரஅள்ளி மலை அடிவாரம் பகுதியில், சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும், அங்கு சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை துரத்திச்சென்று, மூர்த்தி, தயாளன், ரவிசங்கர், ஆறுமுகம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17ஆயிரம் பணம் மற்றும் 4 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.