தர்மபுரி, ஆக.12:தர்மபுரி இண்டூர் எஸ்ஐ சரவணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குப்புசெட்டிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் குமார் (30), சுப்பிரமணி மகன் குமார் (44), உதயகுமார் (33), செந்தில் (35) ஆகியோரை சுற்றி வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹6,300 பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாடிய 4பேர் கைது
previous post