சூளகிரி, ஜூலை 23: சூளகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியான தியாகரசனப்பள்ளியில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, சூதாடிக் கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். கொடிதிம்மனப்பள்ளியை சேர்ந்த நாகராஜ்(45), ஓடையனூரை சேர்ந்த வெங்கடேஷ்(49), மல்லேம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன்(27), தியாக ரசனப்பள்ளியை சேர்ந்த சீனப்பா(46) ஆகிய 4பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ₹1800 மற்றும் 4டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 4பேர் கைது டூவீலர்கள் பறிமுதல்
34
previous post