சிவகாசி, ஜூன் 10: சிவகாசியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகாசி கருமன் கோவில் பகுதியில் சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் சித்துராஜபுரத்தை சேர்ந்த கண்ணன்(60), செல்வராஜ்(57), பாலமுருகன்(56) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் 3 பேரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 790ஐ பறிமுதல் செய்தனர்.