தர்மபுரி, ஜூலை 16: இண்டூர் எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதகப்பாடி மண்டு மாரியம்மன் கோயில் அருகே, சூதாடிய வெங்கடேஷ் (37), சரவணன் (33), மனோகரன் (49), மணி (28) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ₹2,030 பறிமுதல் செய்தனர். மாரண்டஅள்ளி எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தைவீதியில் சூதாடிக்கொண்டிருந்த ஒட்டப்பட்டியை சேர்ந்த கார்கி(53), வேலூர் பீர்பக்தர், கோவை ராஜேஷ்பந்தாரி(28), பகதூர் மல்லா(40), சேலம் நரேஷ்குமார்(32), நாமக்கல் மகேஷ்வரன்(51), கிருஷ்ணகிரி பிரகாஷ்(25), பாலக்கோடு தீபகதர்(55) ஆகிய 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ₹21,500 ஐ பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 12 பேர் கைது ₹23 ஆயிரம் பறிமுதல்
43
previous post