தர்மபுரி, ஆக.8:பென்னாகரம் போலீஸ் எஸ்ஐ கருணாநிதி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, ஜங்கம்பட்டி கிராமத்தில் சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ்(40), சுப்பிரமணி(44), முனுசாமி(49), சந்தீப்(29), வெங்கடாஜலம்(54), ஹரிகிருஷ்ணா(34), சுரேஷ்குமார்(44), குமார்(44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும், போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ₹1,530ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் ஏரியூர் போலீஸ் எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது ஏரியூர் ஓங்காளியம்மன் கோயில் பின்புறத்தில் சூதாடிய அதே பகுதியை சேர்ந்த செந்தில், கோவிந்தராஜ், ரவி(45), சிவா(40) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 12 பேர் கும்பல் கைது
previous post